ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது.

ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது .

கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின.

தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர் .

  • புளியாவத்தை கன்னன்

Author

Related posts