இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு

இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு

இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு ஏற்பட்டிருப்பதால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு திண்டாட்டத்தில் இருக்கிறார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அமைச்சரவையிலிருந்து மற்றோர் சமயப் பற்றுமிக்க
கட்சியான ஷாஸ் விலகியுள்ளது.

இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் ஷாஸ் கட்சி, அவரது கூட்டணியில் தற்போதைக்குத் தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதனால் கட்டாய தற்காலிக ராணுவச் சேவை விதிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைக் களைவதற்கு அரசாங்கத்திற்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.

இதற்கு முந்திய நாளில், ஐக்கிய தோரா யூதம் என்ற சமயப் பற்றுமிக்க கட்சி, இந்த விவகாரம் தொடர்பில் திரு நெட்டன்யாகுவின் கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து அவருக்குத் தற்போது நாடாளுமன்ற இடத்தில் ஒரே ஒரு பெரும்பான்மை உள்ளது.

இருந்தபோதும், ஷாஸ் கட்சி தற்போதைக்குக் கூட்டணியிலிருந்து விலகவில்லை எனக் கூறியுள்ளது.

அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாது என்று கனத்த இதயத்துடன் ஷாஸ் முடிவுசெய்துள்ளது,” என்று அக்கட்சி, தனது வெளிநடப்புக்குப் பிறகு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது.

ஷாஸ் கட்சி, ஆளுங்கூட்டணியிலிருந்து தற்போது விலகாமல் இருந்தாலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் அபாயத்தைத் திரு நெட்டன்யாகு எதிர்நோக்காமல் இல்லை என்றும் சொல்ல முடியாது.

அதே நேரத்தில் காஸா சண்டை நிறுத்தத்திற்கான முயற்சிகளுக்கும் இந்த விவகாரம் பங்கத்தை ஏற்படுத்தாது.

ஜூலை 17ல் இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்குத் தொடங்கிய மூன்று மாத இடைவேளை, இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான கால அவகாசத்தைத் திரு நெட்டன்யாகுவுக்கு அளிக்கும்.

சீர்குலைந்துவரும் இஸ்ரேலிய அமைச்சரவையின் தொடர்பில் திரு நெட்டன்யாகு தரப்பிலிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளிவரவில்லை.

கட்டாய தற்காலிக ராணுவச் சேவை குறித்து தீவிர வைதீகக் கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் நேரத்தில், ஹமாசுடனான பேச்சுவார்த்தைகளில் விட்டுக்கொடுக்காதபடி தீவிர வலதுசாரிக் கட்சிகள் திரு நெட்டன்யாகுவிற்கு நெருக்குதல் அளித்து வருகின்றன..

கத்தாரில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவாரத்தைகள் ஹமாசுடனான உடன்பாட்டை எட்டுவதற்குத் தன்னால் ஆன அனைத்தையும் செய்யும்படி திரு நெட்டன்யாகுவுக்கு ஊக்கம் அளித்துள்ளன. இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு ஏற்பட்டாலும் பிரதமருக்குப் பாதிப்பு இல்லை.

போரைத் தொடரும்படி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவரும் நிதியமைச்சர் பெஸல் ஸ்மொட்ரிட்ஜும் நிலைப்பாடு கொண்டுள்ளபோதும் சண்டை நிறுத்தத்திற்கான போதிய நாடாளுமன்ற வாக்குகள் திரு நெட்டன்யாகுவுக்கு உள்ளன.

Author

Related posts