பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று லிந்துலையில் கைதுசெய்யப்பட்டார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சந்தேகத்தில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் அந்த இளைஞரை நேற்று நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் போயா தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
அந்த நபரிடமிருந்து 30 முழுப் போத்தல்களும், 96 கள்ளு போத்தல்களும், மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை மதுபான போத்தல்கள் சகிதம் இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.