செம்மணி விவகாரத்திற்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வீ. எஸ். இராதாகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் கேரிககை விடுத்தார்.
செம்மணி விவகாரம் சர்வதேசம் வரை சென்றுள்ளது. ஆனால், உள்நாட்டில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இந்த விடயத்தில் கடந்த கால அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது. எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.