வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம் அடைந்து வத்தேகம மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கண்டி வத்துகாமம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துக்கு சொத்தமான பஸ் ஒன்று இன்று காலை 10.45 அளவில் விபத்துக்குள்ளானது.
வத்துகாமத்திலிருந்து இருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் “அரலிய உயன”பகுதியில் விபத்துக்குள்ளானதில் எண்மர் சிறு காயங்களுக்குளாகிய நிலையில் வத்துகாமம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தின் போது பஸ்சில் 15 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்கான விசாரணைகளை வத்துகாமம் பொலிசார் முன்னெத்து வருகின்றனர் .