கல்விச் சுற்றுலாவுக்கு ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல? என்று கேட்டுப் பாடசாலை மாணவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமை மன ரீதியாகப் பாதிப்படையச்செய்வதாகத் தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன்பாக சாத்வீக போராட்டத்தை மேற்கொண்டார்.
இந்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மதக் கடிதமும் வழங்கியிருக்கிறார். எனினும், மாணவனை மட்டும் சுற்றுலலாவுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுச் சென்றதால், அவர் ஆத்திரமுற்று கல்வி அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.