பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது

பஸ் கட்டணம் 0.55 வீதத்தால் குறையும்

பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாள்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்க ஆணைக்குழு விரைவில் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயோமி ஜெயவர்தன குறிப்பிட்டார்.

முன்பு திட்டமிட்டவாறு, வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் ஜூலை முதலாம திகதி முதல் அமலுக்கு வர வேண்டியிருந்தது. எனினும், எரிபொருள் விலை மாற்றத்தின் காரணமாக அஃது இன்று அமலில் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Related posts