அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை

அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை

அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11 வாக்குககளைப் பெற்று ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் நாகந்தலகே தொன் கபில நாகந்தல அம்பகமுவ ளபிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து தலைமையில் நேற்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றது. உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடந்தது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01, ஈரோஸ் ஜனநாயக முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேச்சைக்குழு 01 என 11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என 10 வாக்குகளைப் பெற்றார்.

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பில் சுயேச்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளைப் பெற்று உப தலைவராகத் தெரிவானர்.

சுயேச்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளைப் பெற்றதுடன் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கருதப்பட்டன.

  1. அம்பகமுவ பிரதேச சபை (21 உறுப்பினர்கள்)
  • தேசிய மக்கள் சக்தி – 08
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01
  • சர்வஜன அதிகாரம் – 01
  • ஐக்கிய தேசிய கட்சி – 01
  • சுயேச்சைக் குழு 01 – 01
  • சுயேச்சை குழு 02 – 01

க. சுந்தரலிங்கம், க. கிருஷாந்தன்

Author

Related posts