ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நில நடுக்கம் றிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.

ஈரானின் செமினான் மாகாணத்திற்கு 37 கிலோ மீற்றர் தென் மேற்காகப் பத்துக் கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், இந்த நிலநடுக்கம் அணுவாயுதப் பரிசோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அணுவாயுத நிலையங்களை நிலத்திற்குக் கீழ் அமைந்திருந்தாலும் சோதனை செய்ததால் ஏற்பட்ட நில நடுக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Author

Related posts