மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 18.3 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருக்கின்றது.
எனினும், பொது மக்களின் கருத்தை அறிந்து ஜூன் முதல் வாரத்தில் தனது பதிலை அளிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.