தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது: அறுகம்பேயில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

இஸ்ரேல் பிரஜைகள் மீது அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்துப் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாகவே தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும முன்பே இலங்கை நடவடிக்கையில் இறங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் அதில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அறுகம்பேயில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்போர் பற்றிப் பெயர் விபரங்களுடன் முழுமையான தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது.

மலைக்குருவி

பேஸ்புக்

Author

Related posts