கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது: புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது. இனிமேல் எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு வழியில்லை எனக் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது என்பதோடு புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுகள் விரைவில் விநியோகிக்கப்படும் எனவும், மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.