நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான 16.10.2026 அன்று டயகமை கிழக்கு தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ். சேகர் தலைமையில், டயகமை சிங்கள வித்தியாலய அதிபர் ஹேமலதா,ஆசிரியர்களின் பங்கேற்புடன் கலை, கலாசார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, இரு பாடசாலைகளுக்கும் இடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.



பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும், மாணவர்கள் மத்தியில் இன ஒற்றுமை,கலாசாரப் புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கௌசல்யா
