சர்வதேச சிறுவர் தினத்யொட்டி டயகமை கிழக்கு தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 450 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இணைந்து சுவையான பிரியாணி உணவை வழங்கி மகிழ்வித்துள்ளனர்.
மாணவர்களின் மகிழ்ச்சியையும் சிறுவர் தினத்தின் சிறப்பையும் முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்நிகழ்வுக்கான உணவைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவதற்காகப் பாடசாலையின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது சொந்தப் பணத்திலிருந்து பங்களிப்புச் செய்துள்ளனர்.



மாணவர்களின் மகிழ்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் ஒன்றிணைந்து ஆசிரியர்கள் முன்னெடுத்த இந்த முயற்சி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமன்றி, அவர்களின் மகிழ்ச்சியிலும் நலனிலும் ஆசிரியர்கள் கொண்டுள்ள அக்கறையை இச்செயற்பாடு வெளிப்படுத்துகின்றது.
சிறுவர் தினத்தை வெறுமனே ஒரு கொண்டாட்டமாகக் கருதாமல், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காகத் தமது சொந்த நிதியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இம்முயற்சி, ஏனைய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைகின்றது.
மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்வதற்காக ஒன்றிணைந்து செயற்பட்ட டயகமை கிழக்கு தமிழ் வித்தியாலய ஆசிரியர்களின் இச்செயற்பாடு, ஆசிரியர் சமூகத்தின் அர்ப்பணிப்பையும் மாணவர்கள் மீதான அன்பையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
கௌசல்யா
