கித்துல்கலை, மன்னகெட்டி அருவியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மற்றையவர் காணாமல்போயுள்ளார்.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், காணாமல்போன நபரை மீட்பதற்கான தேடுதல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கித்துல்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
