ஈரானிய கப்பலில் நோய்வாய்ப்பட்ட ஊழியர்களைக் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி துறைமுகத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் 27 பேர் சுகவீனமடைந்துள்ளனர். இவர்கள்கடற்படையின் டோராப் படகுகள் மூலம் நேற்றுப் பகல் (24) காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் அவர்களைக் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
