அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று (24) ஆரம்பமாகியது. இன்று (25) வாக்கெடுப்பு இரவு ஏழு மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது சட்ட மூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய 95 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியது.
