இரத்தினபுரி, கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஹப்புகஸ்தன்னை கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 86 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும்,வாணி விழாவும் அண்மையில் (21.10.2026) பாடசாலையின் அதிபர் திருமதி சுபாசினி பாஸ்கரராவ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் திறமை பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள்,சான்றிதழ்கள் வழங்கினார்.இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்களான சண்முகம் ஜெயக்குமார், அநுர பிரபாத்,இதர பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



எஸ். ஆர். இரவீந்திரன்
