தித்வா புயலின் பின்னர் மலையக பகுதியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம், ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து, வட்டவளை நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

கடந்த 2026.08.03 அன்று ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த மலையக ரயில் பாதையிலுள்ள, வட்டவளை ரயில் நிலையத்தின் தற்காலிக நடவடிக்கைகளுக்காக வேறொரு கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.
சேதமடைந்த ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம்,இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக, மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள பழமையான வட்டவளை புகையிரத நிலையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

புகையிரத நிலையத்திற்குப் பின்புறமுள்ள சரிவுப் பகுதியில் மண் பகுதி நிலையற்றதாகி நிலையக் கட்டடத்தின் மீது விழுந்தமையினாலேயே இச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சரிவு நிலையற்றதன்மை அடைந்தமையானது மண்சரிவு நிலைமை அல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) நுவரெலியா மாவட்ட பிரதான புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்தார்.
வட்டவளை புகையிரத நிலையத்தைப் புனரமைப்பதற்காக அவ்வளாகத்தில் கள ஆய்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
