ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளைப் பகுதியில் இன்று (20) முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
நீர்கொழும்புவிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஹற்றன் சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
ஓட்டோவை மூத்த மகள் செலுத்தியதாகவும் விபத்தில் ஏனைய இரு மகள்களும் தாயும் காயமடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
