படம்:இணையம்
வசைச் சொல் பயன்படுத்தினான் என்ற குற்றத்திற்காக, மாணவனைக் கொடூரமாகத் தாக்கிய அதிபர் ஒருவருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டாரகமை பகுதி பாடசாலையொன்றில் தரம் ஏழில் பயிலும் மாணவனின் தந்தை இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
வசைச் சொல் பயன்படுதினார் என்று மாணவனின் முகத்தில் இரு கைகளாலும் மாறி மாறி, சரமாரியாக அந்த அதிபர் அறைந்ததில் மாணவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பல் துலக்க முடியாத அளவு வலியால் பாதிக்கப்பட்டுள்ளான். இப்போது அவன் ஹோமாகமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்தச் செய்தியைக் கேள்வியுற்றதும் கடந்த ஓகஸ்ட் மாதம் விசாகப்பட்டினத்தில் ஆறு வயது மாணவன் ஒருவன், ஆசிரியை அறைந்ததால் மயக்குமுற்று மரணமடைந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.
என்னதான் இருந்தாலும் குழந்தைத் தனத்தையும் பிள்ளைப் பராயத்தையும் அனுபவிப்பதற்குப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியர்களுக்கு எப்போதுதான் புரியப்போகிறதோ!
