பத்தேகமை பகுதியில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பத்தேகமை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (04) அம்பலாங்கொடை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கரந்தெனியா பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 48 மணிநேரத் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகக் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
