உயிர்த்த ஞாயிறுபயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படுகிறது.
இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது.
இன்று காலை புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன், சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் 2,309 முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.
கடந்த ஒகஸ்ட் 24 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
