லிந்துலை தியன்நிலக்கலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஆண் தொழிலாளர்கள் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
இன்று முற்பகல்வேளையில் மட்டுக்கலைத் தோட்டத்தில் பெண்கள் 15 பேரும் ஆண் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர். அவர்களுள் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
ஏனையவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் இரு தோட்டங்களிலும் 22 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா
