நால்வரின் நிலைமை கவலைக்கிடம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று (24) முற்பகல் 11.45அளவில் பெண்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கௌசல்யா
