கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (23) எட்டாவது நாளை எட்டியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் தொடர்ந்து அப்பகுதியிலேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நேற்று (22) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, விகாரமகாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலையைச் சூழவுள்ள பகுதி, பூங்காவின் நடைபாதைகள் மற்றும் எப்.ஆர். சேனநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், டி சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் பிளவர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
