பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் வயோதிபர் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது.
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லெமன் மோரா தோட்டத்தில் இருந்து பாடசாலை சிறார்களைக் கூட்டிச் சென்று, ஹப்புகஸ்தன்னை தமிழ் வித்தியாலயத்தில் விட்டு விட்டுத் தனது இல்லத்திற்குத் திரும்பிச் சென்ற வேளையில், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான லெமன் மோரா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயது உடைய பழனியாண்டி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.(படம்:கோப்பிலிருந்தது)
மஸ்கெலியா விசேட நிருபர்
