உலக சுற்றுலா தினத்தையொட்டி மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்றும் (29) இன்றும் (30) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தலைமையில் நல்லதண்ணி மோகினி அருவி பகுதியில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.



மத்திய மாகாண ஆளுநர்,சுற்றுலாத் துறை அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக்,வட்டார உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன், நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர,ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர, நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,விசேட அதிரடிப் படையினர், மவுசாகலை நீர்த் தேக்க பகுதியில் உள்ள இராணுவத்தினர்,கடற்படையினர், நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள்,நகர,கிராம, பெருந்தோட்ட மக்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
