மலையகத்தில் பெய்யும் தொடர் மழையால் நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது.
மவுசாகலை, கென்யோன், புரோட்லேண்ட், லக்சபானை, பொல்பிட்டி, நவலக்சபானை,கலுகலை,விமலசுரேந்திரா, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களுக்கு அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளதால் மேற்படி அவற்றின் நீர் வான் கதவுகள் வழியாக வெளியேறுகிறது.
நேற்றுக் காலை 10 .20 முதல் தொடர்ந்து இந்த நீர்த் தேக்கங்களின் நீர் வெளியேற்றம் செய்ய படுவதால், தாழ் நிலக் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
குறிப்பாக மகாவலி கங்கை, களனி கங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து இப் பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்த் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மஸ்கெலியா விசேட நிருபர்
