ஹட்டன் கொழும்பு பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
நேற்று மாலை வேளையில் ஹட்டன் கொழும்பு பிரதான சாலையில் பாரிய பலா மரம் சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இச் சம்பவம் நேற்று 22 ஆம் திகதி மாலை ஹட்டன் கொழும்பு பிரதான சாலையில் கித்துல்கலை பகுதியில் இடம் பெற்று உள்ளது. அப் பகுதியில் பெய்து வந்த கன மழையுடன் கூடிய காற்று வீசியதால் பாரிய அளவிலான பலா மரம் சாய்ந்ததால் இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அத்துடன் அந்த பலா மரம் சாய்ந்து மின் கம்பிகள் மீது வீழ்ந்ததில் அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக கித்துல்கலை பொலிசார் தெரிவித்தனர்.
கித்துல்கலை பொலிசார் நடவடிக்கை எடுத்து மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதா கித்துல்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா விசேட நிருபர்
