50 ஆண்டுகள் பழைமையான வடிகால் குழாய் வெடிப்பை 24 மணித்தியாலத்தில் சீர்செய்த கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு, மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பொரளை டட்லி சேனாநாயக்கா வீதியிலுள்ள வடிகால் குழாய் கட்டமைப்பில் வெடிப்பு ஏற்பட்டுப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. அதனை, மாநகர சபை ஊழியர்கள் 24 மணித்தியாலத்தில் சீரமைத்துப் பாதையைப் பயன்பாட்டுக்காகத் திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறான ஊழியர்களுக்கு நிச்சயம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அவர்களைப் பாராட்டிப் பதிவிட்ட முதல்வரும் பாராட்டப்பட வேண்டியவர்தான்!
