மியான்மரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் தொலைபேசி வாயிலாக உரையாட அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2021 பிப்ரவரியில் மியான்மா் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆங் சான் சூகிக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தலைநகா் நேபிடாவில் உள்ள ரகசிய இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், லண்டனில் உள்ள மியான்மா் தூதரகத்தில் இருந்து அவரின் இளைய மகன் கிம் ஆரிஸ், தனது தாயாருடன் சுமாா் 20 நிமிஷங்கள் தொலைபேசியில் பேசியுள்ளாா்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயுடன் பேசியது குறித்து கிம் ஆரிஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளாா். தற்போது 81 வயதாகும் தனது தாயாரும், பிற அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
