முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புடைய நிகழ்வொன்றின்போது, அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தரை கெமெராவால் தாக்கியதாகக் கூறப்படும் தனியார் ஊடக நிறுவனமொன்றின் படப்பிப்பாளர் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, காவல்துறையினரால் நேற்று (30) விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய கொழும்பு கொம்பனித்தெரு காவல் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஒருவருடன் அவர் காவல்நிலையத்திற்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான நிகழ்வொன்றின்போது, படப்பிடிப்பாளர் ஒருவர் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தரை கமராவால் தாக்கிய காட்சிகள், சம்பவ இடத்தில் இருந்த ஏனைய ஊடகவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளி பின்னர் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
சம்பவத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் காவல் அதிகாரி A.H. மகேஷ் ரஞ்சன், தற்போது நாரஹேன்பிட்டி காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா
