ஹட்டன், நோர்வூட் பகுதியில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்ப் பாடசாலை அதிபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை அதிபர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவனை அவரது பெற்றோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி அதிபர் தமது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
