தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று (24)காலை 10 30 இற்கு மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் மூன்று வழிகளில் நீர் வெளியேற்றம் செய்யப்படுவதால், தாழ் நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக டயகமை பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கையின் வெள்ள நீர் அதிகரித்து வருவதாலும் அப் பகுதியில் இருந்து ஆரம்பமாகும் ஏனைய அனைத்து ஓடைகளில் அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்க்கு அதிக அளவில் நீர் வருவதால் தற்போது வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது. மேலும் நீர் மின் உற்பத்தியை பெருக்கி அதில் இருந்து வெளியேறும் கென்யோன் நீர்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்று 12.15இற்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்
