சிவலிங்கத்தின் இறுதிக்கிரியை ஞாயிறன்று (27) கொட்டகலையில் நடைபெறுகிறது. அன்னாருக்குத் தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மலையகத்தின் இலக்கியத் தலைமையும் பிரபல இலக்கியவாதியும் தொழிற்சங்க, அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் கடந்த (24) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் சேவையாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார,சமூக விடிவிற்காகத் தனது பேனா முனையைக் கூர்மையான ஆயுதமாகக் கொண்டு, அறவழியில் போராடிய ஒரு ஜனநாயகப் போராளியாக இவர் திகழ்ந்தார்.
எஸ். ஆர்.இரவீந்திரன்
