தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார்.
1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு திரைப்பட நடிகராகப் புகழ்பெற்றிருந்த எம்.ஜி.ஆர். முதல்வரானார்.
1977 தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட எம்ஜிஆரின் அதிமுக, 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக 34.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை ஒரு கோடி 62 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலமாக எம்ஜிஆரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிட கட்சிகள் இல்லாத முதல் ஆட்சி அமைகின்றது.
ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த எம்ஜிஆரைத் தொடர்ந்து, 49 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 இல் விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
திமுகவின் முதன்மைத் தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் தவெக வேட்பாளர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கி 1977 இல் நடிகரான எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறது தற்போது தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
