இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் கடந்த ஈராண்டு காலத்தில் பாரிய அபிவிருத்தியைக் கண்டிருக்கிறார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தியின் இரண்டு வருட கால முன்னேற்றம் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வதற்கான சிறப்பு ஊடகச் சந்திப்பு இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த இரண்டு வருடத்திலே இதுவரை இல்லாத ஒரு அபிவிருத்தியை இன்று நாடு அடைந்திருக்கின்றது. அதிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் விசேஷமாக தமிழ் மக்கள் இங்கே பாரிய அபிவிருத்தியைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள்.
எனவே, இன்னும் நாங்கள் எங்களுடைய மிகுதி ஆட்சிக் காலத்திலே இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சகல தோட்டங்களுக்கும் பூரணமான அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இன்று (01.10.2026) வியாழக்கிழமை இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தியின் இரண்டு வருட கால முன்னேற்றம் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான சிறப்பு ஊடகச் சந்திப்பு இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்:
கடந்த காலத்திலே அரசியல் ரீதியாகத்தான் அபிவிருத்திகளை செய்து கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று இந்த மக்களுக்கு தேவைகள் இருக்கிறதோ அந்த மக்களுக்கான அபிவிருத்தியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று பெருந்தோட்டத்துறை வளர்ச்சி செய்வதற்காக நாங்கள் இந்த தேயிலை கிராமங்களை அமைத்து வருகிறோம். எனவே இரத்தினபுரி மாவட்டத்தில் விசேடமாக அதிகளவான சிறு தோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
அதேப்போல் நீலகாமம் பிரச்சினை, நீலகாமத்திலே அத்துமீறி அந்த மக்கள் தாக்கப்பட்டு அங்கு சம்பவம் நடைபெற்றது. எனவே, அந்த பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் காணியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். மிக விரைவில் அந்த மக்களுக்கு அந்த காணியும் பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேபோல, இன்று சுற்றுலாத் துறையை மேம்பாடு செய்து, அதனூடாக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மலையகப் பகுதிகளிலே இன்று அதிகமான போதைப்பொருள் பாவனையால் அங்குள்ள மக்கள் சமூகரீதியாக மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
எனவே போதைப்பொருளை அழிப்பதற்காக, நாங்கள் பிரதிப் பொலிஸ் அதிபர், அதேபோல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் ஊடாக இந்த போதைப்பொருளை நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
அதேபோல, பெருந்தோட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்றுங்கு சிறந்த வைத்திய சேவையை வழங்குவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 53 வீடுகளுக்கு 55 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்து கூரை தகடுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறோம்,
அதேபோல் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடாக 10. 3 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து வீடுகளை நாங்கள் திருத்தி அமைத்து அந்த மக்கள் வாழ்வதற்கான ஒரு சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
மலையக மக்கள் தூய்மையான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். மலையகப் பகுதிகளில் நீர் இருக்கிறது. ஆனால் சரியான திட்டமிடல் இன்றி அந்த மக்கள் அந்த நீரைப் பெற்றுக்கொள்வதிலே பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள்.
எனவே தூய குடிநீருக்காக 61 மில்லியன் ரூபாயை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்,
இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட… 15,000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் செல்கிறார்கள்.
அதிலே இரத்தினபுரி மாவட்டத்திலே அதிகமான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றார்கள். எனவே, கடந்த 50 வருடங்களாக யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதறகமைய, எங்களுடைய அரசாங்கம் எங்களுடைய அமைச்சர் சுனில் செலவி தலைமையிலே அமைச்சரவை அனுமதியுடன் நாங்கள் இந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்.
எனவே இந்த நாட்டிலே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழலை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம்.
கடந்த காலத்திலே ஆசிரியர் நியமனங்களாக இருக்கலாம் அல்லது வளப் பங்கீடாக இருக்கலாம், புறக்கணிக்கப்பட்ட நிலைமைதான் காணப்பட்டது.
ஆனால் , கடந்த இரண்டு வருடங்களிலே நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி, நாங்கள் கிட்டத்தட்ட 2025ஆம் ஆண்டு மாத்திரம் 51 மில்லியன் ரூபாவை தமிழ் பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
அதேபோல, பாடசாலைகள் கட்டப்பட்டு பாதியிலே நிறுத்தப்பட்டிருந்தன. அந்த அனைத்து வேலைகளும் பூர்த்தியாகி, பாடசாலைகள் தற்பொழுது கற்றல் நடவடிக்கைகளுக்கு பாடசாலைகள் நாங்கள் கையளித்திருக்கிறோம்.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பிரகாரம், முதலாவது 1300 வீட்டுத் திட்டத்திலே, 25 வீடுகள் பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வீடுகள் மிக விரைவிலே அந்த மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவிருக்கின்றன.
அதேபோல், இஅனர்த்த வீட்டுத் திட்டம் 397 வீட்டுத் திட்டங்களிலே, நாங்கள் ஐந்து வீடுகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
அதேபோல, 2184 இந்திய வீடமைப்புத் வீடமைப்புத் திட்டத்திலே, கிட்டத்தட்ட 413 வீடுகள் இரத்தினபுரி மாவட்ட மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடுகள் கட்டுவதற்கான் ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எனவே மிக விரைவிலே இந்த வீடுகள் கட்டப்பட்டு அந்த மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்றார்.
இரத்தினபுரி மலைக்குருவி நிருபர் எஸ்.ஆர்.இரவீந்திரன்
