அமெரிக்கத் தொண்டு நிறுவனமான அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) ஏற்பாட்டில் சபரகமுவை மாகாணத்திலுள்ளஆறு தமிழ் பாடசாலைகளுக்கு சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில், கணினிகளும் அதற்குரிய தளபாடங்களும் வழங்கப்பட்டுளளதாக அதன் இணைப்பாளர் எம்.பி. சந்திரசேகரன் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தோட்டத்தில் அமைந்துள்ள இ/மில்லவிட்டி தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு கணினித் தொகுதிகள் உத்தியோகப்பூர்வமாக இன்று (29) வழங்கிய பின்னர் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.



பாடசாலை அதிபர் ஜோசப் ஏ. பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் டாலை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஆர். நடராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சபரகமுவை மாகாண இ/மில்லியவிட்டி தமிழ் வித்தியாலயத்திற்கு (02) இரண்டு கணினித் தொகுதிகளும் இ/நிவி/பிறைட்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு ( 04) நான்கு கணினி தொகுதிகளும், இ/நிவி/இரம்புக்கந்தை தமிழ் வித்தியாலயத்திற்கு (02) இரண்டு கணினி தொகுதிகளும் கே/தெஹியோவிட்டை இன்னோயா தமிழ் வித்தியாலயத்திற்கு (02) இரண்டு கணினி தொகுதிகளும் இ/புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு (05) ஐந்து கணினி தொகுதிகளும் இ/நாவலர் தமிழ் வித்தியாலயத்திற்கு (05) ஐந்து தொகுதிகளும்
இ/இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்திற்கு (02)இரண்டு தொகுதிகளுமாக மொத்தம் 22 கணினி தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் சுயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கணினித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எக்காரணம் கொண்டு பாடசாலை அலுவலகத்தில் நாம் வழங்கும் கணினித் தொகுதிகள் இருக்க கூடா. மாணவர்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட வேண்டும் என மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
