பேராதனை பகுதியில் ரயில் பாதையில் மண்சரி அபாயமுள்ளதால்,இரண்டு நாள்களுக்குப் ரம்புக்கணை,பேராதனை, கம்பளை ஆகிய சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் ரம்புக்கனை,பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில், மண்சரிவு ஏற்பட்டு, ரயில் மார்க்கத்தில் மண் அடித்துச் செல்லப்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த அபாயகரமான சூழ்நிலையைத் தவிர்த்து, ரயில் மார்க்கத்தை சீரமைப்பதற்கான அவசரப் புனரமைப்புப் பணிகளை நாளை (24), நாளை மறுதினம் (25) ஆகிய இரு தினங்களில் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட அந்த இரண்டு நாள்களிலும் ரம்புக்கனை – பேராதனை,கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள்களுக்காகப் பணம் செலுத்தி, இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள், தாம் செலவழித்த முழுத் தொகையையும் எந்தவொரு ரயில் நிலையத்திலிருந்தும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
