தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம்.
இன்று காலையில் எழுந்ததும், நெஞ்சு வலிப்பதாகக் குடும்பத்தினரிடம் தேவா கூறியிருக்கிறார். உடனடியாக அவர்கள் தேவாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.
கானா பாடல் என சென்னையின் பட்டிதொட்டிகளில் மட்டும் ஒலித்து வந்த இசையை, திரையிசைப் பாடல்கள் மூலம் உலகப்புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இசையமைப்பாளர் தேவாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தேனிசைத் தென்றல் என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தேவா. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசையமைத்துக் கொண்டிருந்தார். 1990களில் சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தவர்.
