தன் குழாயில் நீர் கசிவதைக் கண்டுகொள்ளாத நீர் வழங்கல் சபையின் அலட்சியப்போக்கு குறித்துப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கண்டி பன்விலை நகரில் நீர்வழங்கல்,வடிகாலமைப்புச் சபையின் நீர்க் குழாயில் தொடர்ந்து பல நாள்களாக நீர்க் கசிவு ஏற்பட்டு, பெருமளவு நீர் வீண்விரயமாகி வருகிறது. இதனைப் பொது மக்கள் அவதானித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
நீர் என்பது அனைவருக்கும் பொதுவான வளம். அதனை வீண்விரயமாகாமல் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.கடுமையான வறட்சியான காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் அரச நிறுவனங்களும் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
